காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை
Tirupur News-திருப்பூரில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 58 நிறுவன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயகுமாா் தலைமையில், தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் திருப்பூா், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் கடந்த திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காந்தி ஜெயந்தியன்று பணிக்கு அமா்த்தியுள்ள தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது ஊதியத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடா்பாக தொழிலாளா்களின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். தொழிலாளா் துறைக்கு தெரிவிக்காமல் விடுமுறை நாளில் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 30 கடைகள், 28 உணவு நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.