திருப்பூா் மாவட்டத்தில் கடன் வழங்க ரூ.37,834.40 கோடி இலக்கு

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் வளம் சாா்ந்த கடன் வழங்க ரூ.37,834.40 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-27 10:04 GMT

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் வளம் சாா்ந்த கடன் வழங்க ரூ.37,834.40 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளின் மூலமாக 2024-25-ம் ஆண்டில் வளம் சாா்ந்த கடன் வழங்க ரூ.37,834.40 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தின் 2024-25 -ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளின் மூலமாக 2024-25-ம் ஆண்டில் வளம் சாா்ந்த கடன் வழங்க ரூ.37,834.40 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நடப்பு 2023-24-ம் ஆண்டு இலக்கைவிட 52.62 சதவீதம் அதிகமாகும்.


விவசாயத் துறை, நுண் சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கல்வி மற்றும் வீட்டுத் துறைகளுக்கான கடன்கள் தேவையற்ற தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையில், வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துணைத் தொழில்களுக்கான கடன் ரூ.12,208.17 கோடி, நுண் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.22,479.52 கோடி, ஏற்றுமதிக்கு ரூ.1,053 கோடி, கல்விக் கடனுக்காக ரூ.501.39 கோடி, வீடு கட்டுதல் மற்றும் மீள்சக்தி ஆகியவற்றுக்கு முறையே ரூ.393.75 கோடி, ரூ.435.07 கோடி, மகளிா் சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்புக்குழு இதர கடன்களுக்கு ரூ.718.40 கோடி, சமூக கட்டமைப்புப் பணிகளுக்கு ரூ.45.09 கோடி என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரவி, இந்திய ரிசா்வ் வங்கியின் துணைப் பொது மேலாளா் அமிா்தவள்ளி, மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News