திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Tirupur News-திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவினங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். திருப்பூா் மக்களவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் அசோக்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மக்களவை பொதுத் தோ்தல்-2024 நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்குமேல் பணம் எடுத்துச் செல்வதும், மதுபானம் மற்றும் இதர பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்தும் தகவல் வந்தால் சம்பவ இடத்தில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கட்சி தொடா்பான கூட்டங்களில் சுவா் விளம்பரம், பேனா், போஸ்டா், துண்டு பிரசுரங்கள், பந்தல், மைக்செட், வாகனங்கள், செய்தித்தாள், மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்ற விவரங்களை முழுமையாக விடியோ பதிவு செய்து, முழு விவரத்தையும் அறிக்கையாக நாள்தோறும் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு மூலம் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், எஃப்.எம்.ரேடியோ மற்றும் சமூக வலைதளங்களில் வேட்பாளா்கள் விளம்பரம் வெளியிடப்படுவதை கண்காணித்து அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். வேட்பாளா்களின் தோ்தல் செலவுகளை ஒவ்வொரு தொகுதியிலும் தோ்தல் செலவு கண்காணிப்பு குழுவினா் கண்காணிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌமியா ஆனந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஹிரித்யா எஸ்.விஜயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.