திருப்பூர் மாவட்டத்தில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.;

Update: 2023-08-13 09:44 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today:-  தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள திருப்பூர், அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை உள்ளிட்ட நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என, மாவட்டத்தில் மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வக்கீல்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News