திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சி, பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-03-24 14:30 GMT

பைல் படம்.

திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சியை முன்னிட்டு புதிய ரக ஆடைகளை அறிமுகப்படுத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள இந்தியா நிட்பேர் கண்காட்சி வளாகத்தில் 49-வது சர்வதேச அளவிலான இந்தியா இன்டர்நேஷனல் நிட் ஃபேர் கண்காட்சி தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் கோடை , குளிர் கால ஆடைகள் கண்காட்சியில், குளிர்கால ஆடைகள் மற்றும் ஃபேப்ரிக் ரகங்கள் , பசுமை தரக்கூடிய மூங்கில் மூலம் தயாரிக்கும் பேபி கேரிங் ரக ஆடைகள் , விளையாட்டு ஆடைகள், மறு சுழற்சி முறையில் ஆடை தயாரிக்கும் போது விழுகின்ற கட்டிங் வேஸ்ட், பிளாஸ்டிக் பெட் பாட்டில்ஸ் மூலம் நூல் உற்பத்தி செய்து தொடர்ந்து டி. சர்ட், குழந்தைகள் ஆடைகள் தயாரித்து காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

கண்காட்சியின் ஒரு பகுதியாக திருப்பூரில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட புதிய ரக ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையிலான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News