திருப்பூரில் இந்து முன்னணியினர் 400 பேர் கைது

Hindu Religious Leader - சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைதை கண்டித்து, திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி சார்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-17 04:40 GMT

திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் உள்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

Hindu Religious Leader -பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சினிமா ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரியும் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்பட இந்து முன்னணி அமைப்பினர், 400 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும், விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News