திருப்பூர்; மின்கட்டண டிபாசிட் தொகை செலுத்த 30 நாட்கள் அவகாசம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் மின்கட்டண டிபாசிட் தொகை செலுத்த 30 நாட்கள் வரை அவகாசம், மின்வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடந்தது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் சுமதி, கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி ஆகியோரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
திருப்பூா் மின்பகிா்மான வட்டப் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டு தொகை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொகையை செலுத்த சென்றபோதுதான் கூடுதலாக முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது தெரிய வருகிறது. அதிலும் மின் கட்டணத்துடன் முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது கூலித் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினராலும் முடியாதது.
ஆகவே, இணையத்தில் உள்ள இரு தொகையை செலுத்தும் குறியீட்டை மாற்றி, தனித்தனியாக செலுத்தவும், முன்வைப்புத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இக்கோரிக்கையை பரிசீலித்த மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சுமதி, பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு, முன்வைப்புத் தொகையை ஜூன் 14 முதல் 30 நாள்களுக்குள் தனியாக செலுத்தலாம் எனவும், வழக்கம்போல மின்கட்டணத்தை தனியாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.
மடத்துக்குளம் பகுதியில் நாளை மின்தடை
திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை பகுதிகள்
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார் பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டி புதூர், மற்றும் கருப்புசாமி, புதூர் எஸ் ஜி புதூர், ரெட்டிபாளையம், போத்தனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லெண்ண கவுண்டன் புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில், மின் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை ( 16ம் தேதி ) காலை 9 மணி முதல் மாலை 4: 00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.