வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது; திருப்பூரில் ‘இன்ஸ்டாகிராம் நட்பு தந்த பரிசு’

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நண்பர்களுக்குள் ஏற்பட்ட விரோதம், வன்முறையில் முடிந்தது. அரிவாளால் வாலிபரை வெட்டிய 3 பேரை, போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-02 07:00 GMT

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21).  இவருக்கும், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு, சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி, தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில், மங்கலம் ரோடு, புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி, அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக, மோகன், அசோக் குமார், கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 

இன்றைய காலகட்டத்தில் வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிவிட்டர் என சமூகவலைதள தொடர்புகளின் வாயிலாக, எளிதாக பலரும் நண்பர்களாகி விடுகின்றனர். இதில், சில ஆண்டுகளுக்கு பிறகு, இப்படி சமூகவலை தள நண்பர்கள் நேரில் சந்தித்துக்கொள்வதும், குடும்ப நண்பர்களாகவும் மாறிவிடுகின்றனர். இதுவே, ஆண்-பெண் பழக்கமாக இருந்தால், நாளடைவில் நண்பர்கள், காதலர்களாகி திருமணமும் செய்துகொள்கின்றனர். இதுதவிர, திருமணமான ஆண்- பெண் நட்பில் தவறான உறவுகளுக்கும் இந்த சமூகவழி நட்பு வழிவகுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், திருப்பூரில் முகநூலில் பழகிய ஆண்கள் இருவருக்குள் ஏற்பட்ட முன்விரோதம், அரிவாள் வெட்டு வரை சென்று, ஒருவர் உயிருக்காக போராடும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது, ‘இன்ஸ்டாகிராம் நட்பு’ தந்த பரிசாக இவர்களுக்கு இருக்கிறது.

Tags:    

Similar News