திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,888 வழக்குகளுக்குத் தீா்வு

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,888 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.;

Update: 2023-12-10 12:04 GMT

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,888 வழக்குகளுக்குத் தீா்வு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று (சனிக்கிழமை) நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,888 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் 18 அமா்வுகளாக நடைபெற்றது. திருப்பூர், தாராபுரம், பல்லடம், அவிநாசி, உடுமலை, காங்கயம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் இந்த சிறப்பு அமர்வு தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டன. மோட்டார் வாகன விபத்துகள், குடும்பம் சார்ந்த பிரச்னைகளுக்காக வழக்குகள், செக் மோசடி, வங்கி கடன் வழக்குகள் என இந்த கோர்ட்டுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இதில், திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் நடராஜன் தலைமை வகித்தாா். அதே மற்ற பகுதிகளில் நடந்த அமர்வுகளில் நீதிபதிகள் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனர். 

இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக் கடன் வழக்குகள் என மொத்தம் 4,324 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 2,888 வழக்குகளுக்கு ரூ.47.92 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது.

Tags:    

Similar News