கெட்டுப்போன உணவு வகைகளை வைத்திருந்த 27 கடைகளுக்கு அபராதம்; திருப்பூரில் அதிகாரிகள் நடவடிக்கை

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், கெட்டுப்போன உணவு வகைகளை வைத்திருந்த 27 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2023-09-02 17:07 GMT

Tirupur News,Tirupur News Today- கடைகளுக்கு அபராதம்; அதிகாரிகள் நடவடிக்கை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- தொழிலாளர்கள் நிறைந்த பனியன் தொழில் நகரமாக, திருப்பூர் விளங்குகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் வசிக்கின்றனர். இதுதவிர, வடமாநில தொழிலாளர்களும், திருப்பூரில் அதிக எணணிக்கையில் காணப்படுகின்றனர்.

மக்கள் தொகை மிகுந்த நகரமாக திருப்பூர் இருப்பதால் அதிக எண்ணிக்கையில் ஓட்டல்கள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் காணப்படுகின்றன. அதிக லாபத்தை கவனத்தில் கொள்ளும் பல ஓட்டல்கள், கடைகளில் கெட்டுப்போன, காலாவதியான உணவு பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. குறிப்பாக, இறைச்சி வகைகள், சாம்பார், சட்னி வகைகளை, பிரிட்ஜில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட பரிமாறுவதாகவும் புகார்கள் வந்தன. 

இதையடுத்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிக்கை தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில், கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, குளிா்சாதனப் பெட்டிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி, தேங்காய் சட்னி, தயிா், மயோனிஷ், மோமோஸ் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

இது தொடா்பாக 27 கடைகளுக்கு, ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும் என்றும், திருப்பூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

Tags:    

Similar News