திருப்பூரில் விஷவாயு வெளியேறியதால், 20 பேர் மருத்துவமனையில் ‘அட்மிட்’; சலவை ஆலையின் மின் இணைப்பு ‘கட்’

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் சலவை ஆலையில் இருந்து விஷ வாயு வெளியேறியதால், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சலவை ஆலையை மூடி, மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.;

Update: 2023-06-08 10:30 GMT

Tirupur News,Tirupur News Today- விஷவாயு வெளியேற்றத்தால், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.  

Tirupur News,Tirupur News Today - திருப்பூரை அடுத்த வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நச்சுவாயு வெளியேறியது. இதனால், காலையில் அப்பகுதியில் விஷவாயு காற்றை  சுவாசித்த அப்பகுதியை சோ்ந்த 15 சிறுவா்கள் உள்பட 20 பேருக்கு தலைவலி, வாந்தி, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் அந்த இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை மீட்டு குமாா் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் 8 போ் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், மாநகர நகா்நல அலுவலா் கவுரி சரவணன், திருப்பூா் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூா் வடக்கு எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா் ஆகியோா் அந்த இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனா்.

இதையடுத்து வெங்கமேடு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது,

வெங்கமேடு பகுதியில் ஏராளமான சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. துணிகளை காம்பேக்டிங் செய்யும்போது ஒருவிதமான ரசாயனம் சோ்க்கப்படுவதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சலவை ஆலைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆலையில் திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா் ஆய்வு நடத்தி, பகுப்பாய்வுக்காக மாதிரிகள் எடுத்துச் சென்றனா். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆலையை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நச்சுத்தன்மை வாயு வெளியான சலவைப்பட்டறையின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து, ஆலையை மூட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News