திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18500 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 18500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது;

Update: 2021-10-03 17:22 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மாபெரும் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அதனடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன.

இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் இன்று 18,500 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News