முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள் ரூ.1 லட்சம் அளித்தனர்
திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறை ஆசிரியர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும். 13 பள்ளிகள், 14 விடுதிகள், மேலும் 7 பழங்குடியின நல பள்ளிகள், 1 விடுதி ஆகியவைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மற்றும் காப்பாளர்கள் இணைந்து தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு ரூ1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மகேஷ்பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர்கள் சங்க பாலன், செயலாளர் பெருமாள், பொருளாளர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.