அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் எச்சரிக்கை

Update: 2022-03-06 14:41 GMT

திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு இணை இயக்குனராக மாரிமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார்  

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த கே.மாரிமுத்து, பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குனராக தமிழக அரசு நியமித்தது.

இதையடுத்து இணை இயக்குநராக அவர் பொறுப்பேற்ற பின் கூறியதாவது: 

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முதல் இணை இயக்குனராக பதவி ஏற்றது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் ஏற்கனவே திருப்பத்தூரில் 5, ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளேன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் தலைமை அரசு மருத்துவமனையில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை,

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கண், பல், போன்ற பலவகை துறைகளுக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள் வரவேண்டும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ஒட்டி போலீஸ்துறையிடம் இருந்த கவாத்து பயிற்சி மைதானம் தற்போது அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அங்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அனைத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய நேரத்தில் வரவேண்டும் நோயாளிகளை நன்றாக கவனிக்க வேண்டும்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும், நோயாளிகளிடம் பணம் பெறுவது குறித்து குற்றச்சாட்டுகள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News