திருப்பத்தூர் அருகே ரூ.20,000 நூதன திருட்டு: மர்ம நபருக்கு வலைவீச்சு

திருப்பத்தூர் அருகே ரூ.20,000 நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர் தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-11 14:19 GMT

பர்கூர் பகுதியை சேர்ந்த ஜெயபால்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வாலூர் பகுதியில் சேர்ந்த தசரதன் (35) இவர் வெலக்கல்நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் சேல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை இருவர் பைக்கில் வந்து செல்போன் மூலம் பணம் 20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும் கையில் பணம் தருவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கடை உரிமையாளர் அவர் கொடுத்த செல்போன் நம்பருக்கு 20 ஆயிரம் போன் பே மூலம் அனுப்பி உள்ளார். பின்னர் அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டபோது, ஏடிஎம் கார்டு மூலம் அருகே உள்ள ஏடிஎம்மில் எடுத்து வருவதாக கூறிவிட்டு அவருடன் வந்த நபரை கடை அருகில் உட்கார வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மர்ம நபருடன் வந்த நபரும் அங்கிருந்து நான் அவரை பார்த்து வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் கூச்சலிட்டு அங்கிருந்த தப்ப முயன்றவரை பிடித்து உட்கார வைத்துள்ளனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த ஜெயபால் (47) டைலர் வேலை செய்து வருவதாக கூறினார். மேலும் மதுபான கடையில் இருந்த என்னை ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி அங்கிருந்து கூட்டி வந்ததாகவும் எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News