நாட்டறம்பள்ளி அருகே 6 கடைகளில் கொள்ளை

நாட்டறம்பள்ளி அருகே 6 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-11-06 11:12 GMT
நாட்டறம்பள்ளி அருகே 6 கடைகளில் கொள்ளை

கொள்ளை நடந்த துணிக்கடை.

  • whatsapp icon

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் துணி கடை, மளிகை கடை, டீ கடை உள்ளிட்டவைகள் உள்ளன. இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். நாட்றம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோ டி காணப்பட்டது.

நள்ளிரவில் டீ கடையின் பூட்டை உடைத்து கும்பல் உள்ளே சென்றனர். கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

அதேபோல் அதே பகுதியில் உள்ள சாதிக் என்பவரின் எண்ணெய் கடையில் பணம் மற்றும் எண்ணை பாட்டில்கள், துணிக்கடையில் பணம், பட்டுப் புடவைகள் மற்றும் துணிகள், வெங்கடேஸ்வரா மருந்து கடையில் பணம் மற்றும் மருந்துகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் அடுத்தடுத்து 6 கடைகளில் தங்களது கைவரிசையை அரங்கேற்றி உள்ளனர். திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்திற்கு மேலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News