ஆலங்காயம் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வரும் மர்ம விலங்கு

பொதுமக்கள் பீதியில் உள்ளதால், இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்

Update: 2023-11-19 15:26 GMT

மதனாஞ்சேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வனத்துறையினர் 

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக முன்பு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் இறந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில்அதே கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது. இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளது.

தகவல் அறிந்து இன்று வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா காவதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதனாஞ்சேரி, சங்கத்து வட்டம் மற்றும் முருகன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கிராமத்தில் சுற்றி திரியும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News