திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,042 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மொத்தம் 1,042 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்

Update: 2022-02-04 14:30 GMT

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என தேர்தல்  ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்,  ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 

இந்நிலையில் அமாவாசை நல்ல நாளை எதிர்பார்த்தும் திமுக தாமதமாக அறிவித்த வேட்பாளர்  பட்டியலாலும் ஆரம்பத்தில் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல் நேற்று முதல் விறுவிறுப்படைந்தது. 

வேட்புமனுத்தாக்கல் இறுதி நாளான இன்று விறுவிறுப்புடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில்..

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளில்

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகளில் திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 219 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்,

ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் 123 பேர் வேட்பு மனுக்களும்,

வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகளில் 292 பேர் வேட்பு மனுக்களும்,

ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகளில் 210 பேர் வேட்பு மனுக்களும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளில்

நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 71 பேர் ,

ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 63 பேர் 

உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 64 பேர் 

என மொத்தம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 1042 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News