திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 12-ஆம் தேதி 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்

Update: 2021-09-09 13:11 GMT

கொரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன் ஏற்பாட்டு பணிகளை குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆட்சியர்  மாவட்டத்தில் உள்ள 500 வாக்குசாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள மக்கள் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த முகாமில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு, இம்முகாமை வெற்றிபெற செய்ய வேண்டும். 90 நாட்களுக்கு பிறகு இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஊசி செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதலாவது தவணை ஊசிக்கூட செலுத்திக் கொள்ளாமல் 6 இலட்சம் நபர்கள் உள்ளனர். இதுவரை  மாவட்டத்தில் 4 இலட்சத்து 39 ஆயிரத்து 353 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 18 வயதிற்கு மேற்ட்டவர்கள் எத்தனை நபர்கள் மாவட்டத்தில் உள்ளனர் என்கின்ற விவரத்தினை சேகரித்து அதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களின் விபரத்தினை கண்டுபிடித்து விடலாம், வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று.

இந்த சிறப்பு முகாம் மூலம் மக்கள் விழிப்புணர்வு பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் முன்வர வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே 70 ஆயிரம் என்ற இலக்கினை கடந்து ஒரு இலட்சம் என்ற இலக்கில் தடுப்பூசி செலுத்தப்படும். எனவே மக்கள் அனைவரும் தவறாமல் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டுமென கூறினார்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) (பொறுப்பு) விஜயன், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் செந்தில், அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News