சாலையில் நிர்வாணமாக திரிந்த மனநோயாளி: ஆடை அணிவித்த பெண் சமூக ஆர்வலர்

மனநலம் பாதிக்கப்பட்டு ஆடை இல்லாமல் சாலையில் சுற்றித் திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி.

Update: 2021-12-21 07:49 GMT

நெல்லையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் நிர்வாணமாக திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி.

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் நிர்வாணமாக திரிந்தவருக்கு ஆடை அணிவித்து உணவு ஊட்டிய சமூக ஆர்வலர் நந்தினி. 

திருநெல்வேலி டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் நந்தினி. இவர் நெல்லையில் இருந்து கங்கைகொண்டான் சென்றுள்ளார். அப்போது நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உடம்பில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக வருவதை கண்டு அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த சால்வையை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் அறையில் கட்டிவிட்டார். அவருக்கு அப்பகுதியில் உள்ள கடையில் இருந்து உணவு வாங்கி ஊட்டியுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மனிதநேயமிக்க நந்தினியின் செயல் எல்லோர் மனதிலும் வெகுவாக பதிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நந்தினி என்ற பெண் தயக்கமின்றி மனதில் எந்த பயமும் இல்லாமல் தன்னுடைய நோக்கம் உதவி என்று மட்டும் எண்ணி செயல்பட்டு வருகிறார். ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கு இது மாதிரியான உதவி செய்ததைக் கண்டு பொதுமக்கள் வெகுவாக அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News