நெல்லையில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து நெல்லையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு.;
மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து நெல்லையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
புரட்சித்தலைவர் டாக்டர்.எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா தெய்வீக நல்லாசியுடன் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையின்படி மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், வாய்ச்சவடால் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் விடியா திமுக அரசை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு மாவட்ட கழக செயலாளர் தச்சை. என். கணேசராஜா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக போலியான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்து இதுவரை மக்களுக்கு என்று ஏதும் கூறியது போல் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினர் அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் விற்பனை நேரத்தை அதிகரித்து ஏழை, எளியோரை வறுமையில் தள்ளுவதாகவும், தற்போது ஆளும் கட்சியான திமுக காணொளி காட்சிமூலம் திறந்து வைக்கும் திட்டங்கள் அனைத்தும் எடப்பாடியார் ஆட்சியில் துவங்கியது என்றும் விடியல் தர போறார் என்று விடியா அரசு பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. அரசு ஊழியர் சந்தோஷ் மரணத்திற்க்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக அரசை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் V.கருப்பசாமி பாண்டியன், சுதா கே. பரமசிவன், மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் பரணி சங்கரலிங்கம், இசக்கி சுப்பையா MLA , A.K.சீனிவாசன், கழக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் I.S.இன்பதுரை, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் V.முத்தையா, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் E.வேலாயுதம், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் R.P.ஆதித்தன், P.நாராயண பெருமாள், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் P.ஜெகநாதன்@ கணேசன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஜான்சிராணி, மற்றும் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.