தலையில் மாட்டிய பாத்திரம்... பரிதவித்த சிறுவன்! அப்றம் நடந்தது இதுதான்!
திருநெல்வேலி அருகே சிறுவனின் தலையில் மாட்டிய பாத்திரம்... பரிதவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வயது சிறுவன் தனது தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டான். பலரும் எடுக்க முயற்சித்து முடியாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலி அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அணைத்தலையூர் எனும் கிராமம். இங்கு மிக்கேல் ராஜ் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் சேவியர் எனும் மகன் இருக்கிறார். இவர் கொஞ்சம் சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டு சமையலறையிலிருந்து எடுத்து வந்த சில்வர் பாத்திரம் ஒன்றை தனது தலையில் தவறுதலாக மாட்டிக் கொண்டுள்ளார்.
பின் அந்த பாத்திரத்தை எடுக்க முயற்சிக்க அவரால் முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார். இதனைப் பார்த்த அவரது தந்தை உட்பட மற்றவர்கள் உடனடியாக அவரது தலையில் மாட்டியிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர். ஆனால் அதுவும் பலனளிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதன்பிறகு உடனடியாக சேவியரை பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவர்களிடம் இதுகுறித்து ஆலோசித்துவிட்டு பின் பாளையங்கோட்டை தீணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தனர்.
மீட்பு படை வீரர்கள் விரைந்து சென்று சிறுவனின் தலையில் மாட்டிய எவர்சில்வர் பாத்திரத்தை மீட்புக் கருவி கொண்டு லாவகமாக அகற்றினர். அதன்பிறகு சிறுவன் மற்றும் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
உங்கள் வீட்டிலும் சிறுவர்கள் சமையல் அறையில் விளையாடுகிறார்களா? கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.