முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தளபதி சமுத்திரத்தில் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Update: 2021-08-11 16:26 GMT

நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளபதி சமுத்திரம் பகுதியை சேர்ந்த முருகன்(50). இவர் குளங்கைள குத்தகைக்கு எடுத்து மீன் பிடிக்கு தாெழில் ெசய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மேலூர் பெரிய குளத்தில் மீன்பிடிக்கும் குத்தகை முருகனுக்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த வேல்முருகன்(30) என நினைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் முன்விராேதம் காரணமாக 10.08.2021 அன்று ஏர்வாடி பெரிய கோவில் வாசல் முன்பு நின்று கொண்டிருந்த வேல்முருகனை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஆதம் அலி விசாரணை மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Tags:    

Similar News