வள்ளியூரில் உலக சிட்டுக்குருவி தினம்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக 400 சிட்டுக்குருவி கூடுகள் இலவசமாக வழங்கப்பட்டது;

Update: 2021-03-21 13:50 GMT

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக  சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. 4. இந்த விழாவில்  RDO விநாயகம்,  அகில இந்திய அறிவிப்பாளர் கவின் பாண்டியன், சூரியன் FM புகழ் சின்னதம்பி என்ற L.சுப்பிரமணியன் குளோபல் லா பவுண்டேசன் நிறுவனர் வழக்கறிஞர் அரவிந்த் நல்லாசிரியர் செல்லப்பா, மரசித்தர் அர்சுனன் வள்ளியூரை சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைவரையும்  வள்ளியூர் சிவந்த கரங்கள் ‌தலைவர் சேவரத்னா A.சிதம்பர குமார் வரவேற்றார்.  கலந்து கொண்ட அனைவருக்கும் வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் க.சித்திரை உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக 400 சிட்டுக்குருவி கூடுகள் இலவசமாக வழங்கினார்.

Tags:    

Similar News