நெல்லை- யாசித்து பெற்ற பணத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் திருநங்கைகள்.

வள்ளியூரில் திருநங்கைகள் கொண்டு வரும் உணவிற்காக முதியோர் மற்றும் ஊனமுற்றோர் காத்து இருக்கின்றனர்.

Update: 2021-05-29 03:12 GMT

ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் திருநங்கைகள்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திருநங்கைகள்  யாசகம் பெற்று சேமித்து வைத்த பணத்தில் பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் ஆதரவேற்றார்.முதியோர். உணமுற்றோர் உணவு இல்லாமல் பசியுடன் இருந்து வருகின்றனர். பல இடங்களில் தன் ஆர்வல தொண்டு நிறுவனங்கள் பல உதவிகள் செய்து வந்தாலும். இதனை அறிந்த  15 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து யாசகம் பெற்று சேமித்து வைத்த பணத்திலிருந்து ஏழை எளிய சாலை ஒரங்களில் ஆதரவு இல்லாமல் இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகின்றனர்.


இந்த உணவினை அவர்கள் சொந்தமாக தயார் செய்து தினமும் தயிர் சாதம், லெமன் சாதம், சம்பர் சாதம் உள்ளிட்ட வித விதமான உணவுகளை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வழங்கி வருகின்றனர்.

தினமும் இவர்கள் மதியம் கொண்டு வரும் உணவிற்காக சாலை ஒர முதியோர் மற்றும் ஊனமுற்றோர் காத்து இருக்கின்றனர்.திருநங்கைகள் பசித்தோருக்கு உணவு அளிக்கும் செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டிவருகின்றனர்.


Tags:    

Similar News