மகேந்திரகிரியில் ககன்யான் விண்கலத்தின் முதல் வெப்ப பரிசோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றி.

Update: 2021-08-28 15:23 GMT

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம்.

நெல்லை மாவட்டம் பணகுடி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சர்வீஸ் மாடலில் உள்ள திரவ எரிபொருள் சோதனை இன்று மதியம் சுமார் 1.10 மணி அளவில் 450 விநாடிகள் நடைபெற்றது.

இந்த சோதனை முழு வெற்றி அடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை இன்று நடைபெற்றது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன், ககன்யான் திட்ட இயக்குனர் ஹட்டன், இயக்குனர்கள் சோம்நாத், நாராயணன் உட்பட அனைவரும் காணொளி காட்சி மூலம் இந்த நிகழ்வை பார்த்தனர். மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும் இயக்குனர் அழகுவேல் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

Tags:    

Similar News