கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு தமிழக சபாநாயகர் ஆறுதல்
பெருமனல் கிராமத்தில் பாறையில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.;
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டன்றத்தொகுதி பெருமணல் மீனவர் கிராமத்தில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் காரணமாக நாட்டுப்படகை அலை இழுத்து சென்றதை தடுத்து நிறுத்த முயன்ற அந்தோணி அலெக்ஸ் ரூபன்( 34) என்பவர் தூண்டில் வளைவு பாறையில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த தமிழக சட்டப்பேரவை தலைவரும், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது பெருமணல் பங்குத்தந்தை பியோன்ஸ் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.