மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சி.இ.20 கிரையோஜெனிக் ராக்கெட் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Update: 2022-01-13 06:28 GMT

பைல் படம்.

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சி.இ.20 கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு ராக்கெட்டுகளுக்கான இன்ஜின்களை சோதனை செய்து ஆய்வு நடத்தி அனுப்பும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று சி.இ. 20 எனப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் வாயிலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்விற்கான பரிசோதனை 720 விநாடிகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பரிசோதனையின்போது விஞ்ஞானிகள் நாராயணன், தியோடர் பாஸ்கர், ஆசீர்பாக்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பரிசோதனையை இஸ்ரோ தலைவர் சிவன், ஆன்லைன் வாயிலாக பார்வையிட்டு மகேந்திரகிரி விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News