நெல்லை அருகே கோயில் விழாவில் மோதல்: சாமியாடி உள்பட 7 பேர் காயம்:போலீஸார் விசாரணை

கோயில் சாமியாடி அர்ஜுனன், மனைவி அம்மாபொண்ணு மற்றும் உறவினர்கள் 5 பேரும் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர்

Update: 2021-07-29 15:15 GMT

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே கோயில் விழாவில் நடைபெற்ற கோஷ்டி மோதலில்  சாமியாடி உட்பட 7 பேர் கு காயம் அடைந்தனர்.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி  பாதிக்கப்பட்டவர்கள், வள்ளியூர் காவல் நிலையம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள ஆனைகுளத்தில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான கோயில் திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. கடந்த 27ம் தேதி அன்று பூமாலை சூடுதல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதையட்டி சிறுவர், சிறுமியர், பெண்கள் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். அப்போது அருகில் உள்ள மற்றொரு தரப்பை சேர்ந்த வாலிபர்கள் கோயில் ஊர்வலத்தின் போது வீதியில் வந்து கோயில் நிர்வாகத்தினரை நகர விடாமல் நடனாமாடியாதாக கூறப்படுகிறது. இதனை கோயில் நிர்வாகத்தினர் கண்டித்தனர்.

இந்நிலையில், கோயில் கொடை விழா நேற்று முன்தினம் இரவு நிறைவு அடைந்தது. இந்நிலையில், எதிர் தரப்பபை சேர்ந்த 10 க்கும் மேற்ப்பட்ட மர்ம கும்பல் கொடை விழா நடைபெற்ற பகுதிக்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரண்டு வந்து  வீடுகளில் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது, இதில், கோயில் சாமியாடியான அர்ஜூனன், அவரது மனைவி அம்மாபொன்னு ஆகியோர் தாக்கப்பட்டனர். பின்பு சம்பவத்தை அறிந்த வந்த அவரது உறவினர் 5 மீதும் மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் ஏழு பேரும் பாடுகாயம் அடைந்தனர். இவர்களை உடனே அவரது உறவினர்கள் வள்ளியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த வள்ளியூர் காவல் உதவி ஆய்வாளர் ஆல்வின் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தாக்குதலில் காயமடைந்த அர்ஜூனன், அவரது மனைவி ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி, இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும்,  இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் அப்பகுதியில் பதுங்கியிருந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டி அப்பகுதியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வள்ளியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட்டனர். பின்பு, வள்ளியூர் உதவி காவல் ஆய்£வளர் ஆல்வின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை விரைவில் கைது செய்வோம் என வாக்குறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

Tags:    

Similar News