சாலையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்கள்; ஆண்கள் சுய உதவிக் குழுவினர் அகற்றம்
திசையன்விளை, விஜய அச்சம்பாட்டில் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்த சீமை கருவேல மரங்களை ஆண்கள் சுய உதவி குழுவினர் அகற்றினர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு சாலையில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகவும் இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்நிலையில், இந்த சீமை கருவேல மரங்களை அகற்ற யாரும் முன்வராத நிலையில், விஜய அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்த "உதயா ஆண்கள் சுயஉதவிகுழு" மூலமாக நடவடிக்கை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து உதவிக்குழு ஆண்கள் தாங்களாக முன்வந்து ஜேசிபி இயந்திரம் மூலம் முதற்கட்டமாக சீமை கருவேல மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தர்மகண், பொங்கத்துரை, மணி குட்டி, சேர்மபாண்டி, ராஜலிங்கம், ஆகியோர் முன்னின்று செய்து முடித்தனர்.
அரசை எதிர்பார்க்காமல் இவர்கள் செய்த இந்த செயல் பொதுமக்கள் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது.