திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு
திசையன்விளை பேரூராட்சியில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.;
நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட 10 இடங்களில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, ராதாபுரம் எம்.எல்.ஏவும், சட்டப்பேரவை தலைவருமான அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர்,ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர செயலாளர் ஜான்கென்னடி, அரசு வழக்கறிஞர் சுகந்தி, லயன்.சுயம்புராஜ், கலை இலக்கியப் பேரவை சுப்பையா, தங்கையா கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.