நெல்லை-கொரோனா நிவாரண நிதி, தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கல்

நெல்லை ராதாபுரத்தில் கொரோனா நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை சபாநாயகர் அப்பாவு வழங்கி துவக்கி வைத்தார்.

Update: 2021-06-15 15:09 GMT

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

தமிழக சட்ட பேரவை தலைவர் அப்பாவு நெல்லை மாவட்டம் இராhபுரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் தொகுப்பு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல கொரோனா நிவாரண நிதியாக 4000 அறிவித்தார். அதன் முதல் தவணையாக ரூ.2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மேலும் 2ம் தவணை தொகையான ரூ.2000 வழங்கும் திட்டத்தை நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட காவல்கிணறு, சங்கனாங்குளம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடங்குளம்,உவரி, குட்டம்,கூத்தங்குழி ஆகிய நியாய விலைக்கடையில் தமிழக சபாநாயகரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News