ராதாபுரம் தேர்தல் வழக்கு மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Update: 2021-03-16 17:13 GMT

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் 203 தபால் ஓட்டுகள் தங்களுக்கு ஆதரவாக விழுந்துள்ளதாக தெரிவித்ததற்கு, இன்பதுரை எம்எல்ஏ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அவை முறையாக உரிய அதிகாரிகளால் அட்டஸ்டட் பண்ணபடாததால் அவை செல்லாதவை. எனவே செல்லாத ஓட்டுகளை கொண்டு எவ்வாறு ஒருவரை வெற்றி பெற்றதாக சொல்ல முடியும்? என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இரு தரப்பினரின் வாதுரைகளை தாக்கல் செய்யும்படி கூறி இந்த வழக்கை வரும் 23ம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News