களக்காடு, பணகுடி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
களக்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி, களக்காடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர் மற்றும் வள்ளியூர் டி.பி ரோடு, நம்பியான்விளை, கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.