பணகுடியில் சிறுமிக்கு காவலர் பாலியல் தொல்லை: உடந்தையான தாயும் தலைமறைவு

பணகுடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் மற்றும் சிறுமியின் தாயார் மீதும் போக்சோ வழக்கு பதிவு.

Update: 2021-09-30 08:53 GMT

காவலர் அருள் ஜாக்சன்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பணகுடி காவலர் மற்றும் சிறுமியின் தாய் மீதும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சாே வழக்கு பதிவு.

நெல்லை மாவட்டம்  வள்ளியூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பணகுடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்  அங்கிருந்து பனிஷ்மென்ட் மாறுதலாக கடந்த ஜனவரி மாதம் பணகுடி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

ஏற்கனவே மனைவியை பிரிந்து இருக்கும் இவர் கொடைக்கானல் குண்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி செல்வி என்னும் பெண்ணை குழந்தையுடன் கூட்டிக்கொண்டு வந்து சட்டவிரோதமாக பணகுடியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த செல்வியின் மகள் கீர்த்தனா (வயது 13) என்ற சிறுமிக்கு தாயின் சம்மதத்துடன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் என்பவருக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின் அலுவலர் சர்ச்சில் அளித்த புகாரின் அடிப்படையில் பணகுடி காவலர் அருள் ஜாக்சன்  மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ள காதலி செல்வி ஆகியோர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர், அவரது கள்ளக்காதலி ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் காவலர் அருள் ஜாக்சன் கடந்த 26 ந்தேதி முதல் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News