பழவூர் நாறும்பூநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-03-01 11:52 GMT
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவில் பங்குனி உத்திர விழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டம் பிரசித்திபெற்ற பழவூர் அருள்மிகு நாறும் பூநாதர் சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் திருக்கோவிலில் வைத்து இந்துசமய அறநிலையத்துறை தக்கார்/செயல் அலுவலர் ராதா முன்னிலையில் நடந்தது.   

இக்கூட்டத்தில் வரும் மார்ச் 10ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழாவை நடத்துவது, அரசு மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் விதிமுறைகளுக்குட்பட்டும், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு திருவிழாவை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதில் கிராம நல முன்னேற்ற சங்க தலைவர் பழவூர் இசக்கியப்பன்,வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் பாண்டித்துரை, பஞ்சாயத்து தலைவி சுப்புலெட்சுமிகுமார், மண்டகப்படி கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News