பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு
பணகுடி பேரூராட்சியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனைத்து வார்டுகளிலும் திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பணகுடி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் 8வது வார்டு வேட்பாளர் ஆனந்தி என்பவருக்கு ஆதரவாக வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் ராஜா, அலெக்ஸ் அப்பாவு ஆகியோர் 8வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், திமுக மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.