சட்டவிரோதமாக மணல் திருட்டு: ஒருவர் கைது
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது;
வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்கர்பட்டி பகுதியில் தலைமை காவலர் ஸ்ரீராமர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நம்பி ஆற்று படுகையில் நம்பியன்விளை பகுதியைச் சேர்ந்த கண்ணன்(46), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் அரசு அனுமதியின்றி Swaraj Mazda லாரியில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின் மணல் திருட்டில் ஈடுபட்ட கண்ணனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து கண்ணணை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார். மேலும் இரண்டு யூனிட் மணல் மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.