வள்ளியூரில் வரும் 27ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வள்ளியூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.;
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பெட் பாலிடெக்னிக் கல்லூரி, வள்ளியூரில் வைத்து நடைபெற உள்ளது.
இத்தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் முன்னோடி வங்கி மூலமாக சுய தொழில் செய்வதற்கு கடன் உதவிகள் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது Resume, கல்விசான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் 9.00 மணிக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று தங்கள் விவரங்களை பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்தல் அவசியம். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel -ல் இணைந்து பயன்பெறலாம்.
இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.