"மின்சாரம் கொடு; இல்லை மின் வாரியத்தை பூட்டு" போஸ்டரால் பரபரப்பு
திசையன்விளையில் சீரான மின்சாரம் கொடு இல்லையேல் மின்வாரியத் பூட்டு என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியில் சமீபகாலமாக தொடர்ந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பதுபோல், மின்சாரமின்றி நடைபெறாது எதுவும் என்னும் சூழ்நிலைக்கு இன்றைய உலகம் மாறிவிட்டது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதுதான் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மூலாதாரம்.
மின்சாரம் இல்லாமல், உணவு சமைப்பதற்கு மாவு, மசாலா போன்றவற்றை அரைப்பதற்கு மிக்ஸி கிரைண்டர் போன்றவற்றை உரிய நேரத்தில் இயக்க முடியவில்லை. துணிகளை தைப்பது, தேய்ப்பது, துவைப்பது என அனைத்துமே மின்சாரத்தில் இயங்கும் எந்திரங்களில் நடைபெறுவதால் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தடைக்கற்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இருப்பிடத்தை எடுத்துக்கொண்டால் நாம் வாழும் நமது வீடு முதல் அலுவலகம் மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் மின்விசிறி ஏசி இல்லாமல் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை. மேலும் புதிதாக நடைபெறும் அலுவலக வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் என கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் என அனைத்துமே மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் ஒவ்வொரு தொழிலாளிகளும் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டே அதிமுக சார்பில் திசையன்விளை பேரூராட்சி முழுவதும் சீரான மின்சாரத்தை கொடு இல்லையெனில் மின்சார வாரியத்தை பூட்டு என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டி உள்ளார்கள்.
இருந்தபோதிலும் தற்போது ஏற்பட்டுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பை ஏற்படுத்தும்.