பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மரணம்
நாகர்கோவில் தனியார் மருத்துவமனை;
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா (வயது 63) மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் வைத்து அவரது உயிர் பிரிந்தது.
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவாவின் இயற்பெயர் சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி(63) இதனை சுருக்கி திரைப்படத்திற்காக நெல்லை சிவா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இவர் திரைப்படங்களில் நெல்லை தமிழை கச்சிதமாக பேசுவதால் அனைத்து இயக்குநர்களும் இவருக்கு தனது திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.
இவர் வடிவேலு உடனான கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் கிணற்றை காணும் என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் புகழ் பெற்றவர். மேலும் இவர் திரைப்படங்;களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர் இவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவரது முதல் படம் 1985இல் வெளியான ஆண்பாவம் ஆகும். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்துள்ள வேப்பிலான்குளம் ஆகும். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். 1985ஆம் ஆண்டில் பாண்யராஜன் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்
பின்னர் சிறிய வேடங்களிலும் நடித்து பின்பு 1990களில் பிற்பகுதியில் நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராக தனது தொழில் வாழ்க்கை தொடங்கினார்.
வெற்றிக்கொடிகட்டு, சாமி, அன்பே சிவம் , திருப்பாச்சி, கிரீடம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சி தொடர்களிலும நடித்து வருகிறார். கொரானா ஊரடங்கு காரணமாக சொந்து ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்துள்ள வேப்பிலான்குளத்தில் தங்கியிருந்தார். இன்று மதிய உணவு அருந்திவிட்டு வீட்டில் அமர்ந்திருந்த அவர் திடிரென மயக்கமடைந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிட்சைக்காக பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள் உடனே நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர். உடனே ஆம்புலன்சில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 5.45 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
இவரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான பணகுடியில் வைத்து நாளை பிற்பகல் நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.