வள்ளியூர் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 412 பேருக்கு பணிநியமன ஆணை

வள்ளியூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 412 இளைஞர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.;

Update: 2022-03-27 12:56 GMT

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் இன்று வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னதநோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் துபாய் சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்றுவரை 2600 கோடி முதலீட்டில் 5 தொழிற்நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாயப்பு முகாமில் 1012 இளைஞர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.

இன்று வள்ளியூரில் பெட் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் அரசு வேலை என்ற அரசானை வெளியீட்டுள்ளார். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்க தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனத்திற்கு பல்வேறு சலுகைகளை அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது.

சிறு தொழில்நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், 95 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். 2047 இளைஞர்கள் பங்குபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 412 இளைஞர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பான வேலைவாய்ப்பு முகாமினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு நன்றியை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மண்டல இணை இயக்குநர் மகாலெட்சுமி, பெட் கல்வி அறங்காவலர்கள் ஷாகுல்ஹமீது, ஜமாலுதீன், கஜாமைதீன், உதவி இயக்குநர்கள் ஹரிபாஸ்கர், மரியசகாய ஆண்டனி, உதவி திட்ட அலுவலர் ராமதுரை, மாவட்ட ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், சத்தியவானிமுத்து, சாந்திசுயம்பு, ஜான்ஸ்ரூபா, அருள்தபசு பாண்டியன், மன்னப்புரம் ஊராட்சிமன்ற தலைவர் அ.அன்றோ வெண்ணிலா, மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் தொழிற் நிறுவன அலுவலர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News