வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காெராேனா தடுப்பூசி முகாம்
வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அறையை தடுக்கும் விதத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேப் போல் வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளர் செண்பகவல்லி தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கோலப்பன் மற்றும் வடக்கன்குளம் மருத்துவ அலுவலர் டாக்டர்.அமிழ்து முன்னிலை வகித்தனர். வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு தடுப்பூசியின் தன்மைகளை எடுத்துக்கூறியும், சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் எனவும் டாக்டர்.அமிழ்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில் சூப்பிரன்ட் பியூலா, வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மூக்காண்டி, ஆறுமுகம், இளநிலை உதவியாளர் ரவி செல்வி, கிராம சுகாதார செவிலியர்கள் பிரேமா, டெய்சி, இந்திரா செல்வி, சிவகாமி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் டேனியல் மற்றும் ரெட்கிராஸ் தன்னார்வலர் அலெக்ஸ் செல்வன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.