நெல்லை அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்
வள்ளியூரில் சித்தமருத்துவம் சார்பில் நடைபெற்ற முகாமில் கபசுர பொடி, கபசுரக் குடிநீர், அமுக்கரா மாத்திரைகள் வழங்கப்பட்டன;
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வள்ளியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா சங்கர வெங்கடேசன் தலைமையில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பேருந்து நிலையம் என பல இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் கபசுர பொடி, கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரை போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்வில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், வள்ளியூர் சித்த மருத்துவ மருந்தாளுநர் லெட்சுமி, சுகாதார உதவி ஆய்வாளர்கள் மூக்காண்டி மற்றும் ஆறுமுகம், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.