கூடன்குளத்தில் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
கூடன்குளத்தில் கனரா பேங்க் ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி. வட மாநில இளைஞர்கள் 6 பேரிடம் கூடங்குளம் போலீசார் விசாரணை.
கூடன்குளத்தில் கனரா பேங்க் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சி பஞ்சாப்பை சேர்ந்த ஆறு இளைஞர்களை பிடித்து கூடங்குளம் போலீசார் விசாரணை.
நெல்லை மாவட்டம் கூடன்குளம் அணுமின் நிலையம் எதிரில் கனரா பேங்க் ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்ல் நாள்தோறும் தினமும் பல பேர் பணம் எடுப்பதுண்டு. அணுமின் நிலையம் அருகில் இருப்பதால் தினம் தினம் மக்கள் கூட்டம் இங்கு அதிகமாகவே காணப்படும். குறிப்பாக வட மாநிலத்தவர் பல பேர் இங்கு பணிபுரிவதால் இந்த ஏடிஎம் வழியாகவே வரவு செலவு நடக்கும்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல கனரா வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த சிலர் அங்கே ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனினும் பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. இதையடுத்து கனரா வங்கி மேலாளர்க்கு புகார் அளித்ததன் பேரில் கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த லக்விந்தேர்(25), ஜெர்மன்ந்த்ஜித்சிங்(30), விசாலம்(19), தெஜெந்திரசிங்(22), மஜிசித்சிங்(26), விஷால் பசி(22) உள்ளிட்ட 6 பேரை பிடித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.