ராதாபுரத்தில் அதிமுக ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட கழகச் செயலாளர் தச்சை- கணேசராஜா அறிவுறுத்தலின் படி, மாநில தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வழிகாட்டுதலின் படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உவரியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி முருகன் தலைமை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அரசின் பொய்யான வெள்ளை அறிக்கை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவது குறித்து மகளிர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மகளிர் அணியில் புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மாநில மகளிர் அணி செயலாளர் வளர்மதி நெல்லை மாவட்டத்திற்கு வர இருக்கிறார். அவர்கள் வழங்கும் அறிவுறுத்தலின்படி மகளிரணி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.