ராதாபுரம் நம்பர்-1 தொகுதியாக உள்ளது- இன்பதுரை

Update: 2021-03-16 08:30 GMT

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி நம்பர்-1 தொகுதியாக இருக்கிறது என அதிமுக வேட்பாளர் இன்பதுரை கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்பதுரை இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று ராதாபுரம் அதிமுக வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 50 ஆண்டு கால கோரிக்கையான ராதாபுரத்தில் நீதிமன்றம், 30 ஆண்டு கால கோரிக்கையான திசையன்விளை தனி தாலுகா, கன்னியாகுமரி மாவட்டத்தில் தலை ஆற்றுநீரை பம்பிங் மூலம் ராதாபுரம் பகுதிக்கு கொண்டு வர ரூபாய் 120 கோடியில் புதிய திட்டம், இரண்டு கல்லூரி கட்டிடங்கள் பணகுடி மேம்பாலம் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.

பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து ராதாபுரம் சட்டமன்ற தொகுதி நம்பர்-1 தொகுதியாக இருக்கிறது. மீண்டும் நான் வெற்றி பெற்றால் தமிழகமே திரும்பி பார்க்கும் அளவு ராதாபுரம் தொகுதியை மாற்றுவேன் என்பதை முக்கிய வாக்குறுதிகளாக மக்களிடம் தெரிவித்து வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News