அதிகஅளவில் கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் போலீசாரால் பறிமுதல்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற 4 லாரிகள் பணகுடி போலீசாரால் பறிமுதல்

Update: 2022-03-30 05:13 GMT

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற 4 லாரிகள் பணகுடி போலீசாரால் பறிமுதல்

நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளம் கடத்தப்படுவதைத் தடுக்க அவ்வப்போது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட பகுதியில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில குவாரிகளில் விதிமுறைகளை மீறி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அவை பக்கத்து மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கேரளாவில் மலைகளை வெட்டி கனிமவளங்களை எடுக்கத் தடை இருப்பதால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.லாரிகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கனிம வளம் கொண்டுசெல்ல அரசு அனுமதி பெற்ற நடைச்சீட்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை வாங்கும் நடைச்சீட்டின் எண்ணிலேயே பல சீட்டுகளை போலியாக அச்சிட்டு கனிமங்கள் கடத்தப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கனிமவளங்கள் ஏற்றிச் சென்ற 4 லாரிகள் பணகுடி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணகுடி போலீசார் இன்று அதிகாலை தெற்கு வள்ளியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பிடித்தனர்

Similar News