நெல்லை மாநகராட்சியில் 4 மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

நெல்லை மாநகராட்சியின் பாளையங்கோட்டை, நெல்லை, தச்சநல்லூர்,மேலப்பாளையம் மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Update: 2022-03-30 05:57 GMT

நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்தது. மாநகராட்சிகளில் மேயர் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளனர் இந்தநிலையில் இன்று மாநகராட்சிகளில் மண்டல தலைவர்கள் தேர்தல் நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இந்த வார்த்தைகளை நெல்லை பாளையங்கோட்டை மேலப்பாளையம் தச்சநல்லூர் என நான்கு மண்டலங்களாக பிரித்து உள்ளார்கள் இந்த 4 மண்டலங்களிலும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இன்று மாநகராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது

மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் துணை மேயர் ராஜு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் 9:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நெல்லை மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத் தலைவராக பிரான்சிஸ், நெல்லை மண்டலத் தலைவராக மகேஸ்வரி, தச்சநல்லூர் மண்டலத் தலைவராக ரேவதி, மேலப்பாளையம் மண்டலத் தலைவராக கதீஜா இக்லாம் பாசிலா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

Similar News