பொருனை நெல்லை புத்தக திருவிழா கண்காட்சியில் பயிற்சி வகுப்பு
நெல்லை பொருநை புத்தக திருவிழா கண்காட்சியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் பயிற்சி வகுப்புகள் துவக்கம்.
பொருநை நெல்லை புத்தக திருவிழா கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. புத்தக திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று பயிற்சி வகுப்பில் பனை ஒலை கொண்டு அழகிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.
மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி துவங்கி வைத்தார். இபனபயிற்சியினை வேல்கனி, ராஜேஸ்வரி, சரஸ்வதி ஆகியோர் நடத்தினர். தெற்கு கள்ளிகுளம் தட்சண மாற நாடார் சங்க கல்லூரி, மா.தி.தா இந்து கல்லூரி, ராணி அண்ணா மகளிர் கலை கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து புத்தக கண்காட்சியின் நான்காம் நாள் நாளை மண்பானை தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.